பெண்சாரல் காணாப் பட்டுபோனஎன் நிலம் - அவள்கண்தூறல் தெளித்தானதோர் கற்றுத்தேர்ந்த வனம்!
எப்பொருளிலும் மெய்ப்பொருள் காண்பதென் அறிவு! - ஆயின்
இப்பொருளிலோ மெய் பொருள் காண்பதல்ல அறிவு!!
தோளுயர் மங்கையவள் தொடுவதென்ன தென்றலோ ?
வாழுயர் கூந்தலின் வீச்சிலென்ன நாற்றமோ?
வார்த்தைகளில் தேனிழைக்கும் பேச்சிலென்ன மர்மமோ?
வசப்படுத்தும் வசீகரம் வாஸ்துக்களின் வர்மமோ?
வானுயராயினும் காலுயராயினும் தவித்தரியா என்மனம்,
தோளுயர் பார்வையில் தொலைந்ததோர் இராட்டினம்!
இக்கொந்தளிக்கும் கலவை என் மொத்தக்காதலின் நிலுவை!
இவை இன்றியமையாத சிலவையென அறிந்தமயாது என் சிலுவை!!

0 comments:
Post a Comment