மழை!

Tuesday, February 10, 2009
கண்முன் பகைவர் கலங்கிடினும்
உள்ளம் ஒருநொடி அழுதிடுமே!
விண்ணின் திரையே அலறியபின்
நெஞ்சம் பலசுகம் உணர்வது ஏன்?

மண்ணின் மணமும் மழையின் துளியும்
தஞ்சம் பிழைக்க வந்தவையோ?!
மண்ணில் புதைந்து நெல்லில் கரைந்து
பஞ்சம் விரட்ட பிறந்தவையோ?!

உழவன் உதிரம் மழையில் நனைந்து
பச்சைக்கம்பளம் விரித்திடுதே!
மலரின் இதழில் ஒதுங்கிய துளியோ
தேனாய் வண்டை அழைத்திடுதே!!

கிழவன் விழிவழி துளிகள் சென்றின்
பேரன் பேத்தியர் நகர்வலமே!
தேனிர் குடித்து வாநீர் துளியில்
காதலர் பார்த்திடும் பெண்ணினமே!!

மறைத்து வைத்த மயிலின் அழகும்
சாரல் தீண்டி வெளிபடுதே!
மண்ணில் மலரும் அழகை எதிர்த்து
வானம் வில்லை விரித்திடுதே!!

ஆறும் அணையும் கரைபுரண்டோடி
கடலை நோக்கி விரைந்திடுதே!
கோடை சோர்ந்த கிணறுகள் கூட
மக்கள் மனம்போல் நிறைந்திடுதே!!

4 comments:

Anonymous said...

nice...keep it going...asswine..:)

Sushma said...

Care to write the same in English?

Vishnuvardhanan Vijayakumar said...

Wonderful Ashwin... :)

AshTray said...

@ Gopal and VV : Thank you so much!

@ Sush : Shall surely do that sometime soon.