Universal Law?

Tuesday, March 23, 2010
Track One :: Brian Greene on The String Theory ::

'One peculiarity of string theory is that it postulates the existence of extra dimensions of space – instead of the usual four dimensions, there must be ten spatial dimensions and one dimension of time to allow for a consistently defined string theory.'
----------------------------------------------------------------------------------------------------------------

Track Two :: Sri Purusha Suktam ::

sahasra SIrshA purusha: | sahasrAksha: sahasrapAt |
sa bhUmim vishvato vRtvA | atyatishTad daSAngulam || 1 ||

-- which means --

(sahasra) Thousands (SIrshA) of heads has (purusha:)the great being. (sahasra) Thousands of (aksha) eyes has he,(sahasra pAt) and thousands of legs. (sa) He (vRtvA) manifests (bhUmim) the world. (atyatishTat) He standsbeyond (daSAngulam) the count of ten fingers.
----------------------------------------------------------------------------------------------------------------

Just wondering if there is a convergence at a different level in sight?

யார் நீ ?

Thursday, February 19, 2009


விரும்பிய மனங்களின் நெருங்கிய இயக்கத்தில்,
அமைதியை கிழித்தெறியும் ஆர்பாட்ட இசையில்,
தாயாம் இயற்கையின் ஒன்பதுமாதத் தயாரிப்பில்,
வெளிவரும் காவியத்தின் நாயகனே நீயோ?

கைக்குள் அடங்கும் குங்குமச் சிமிழ்போல்,
பூதங்கள் ஐந்தால் சிவப்பை மறைத்து,
வளர்ந்து படர்ந்து நெளிந்து மெலிந்து,
மண்ணில் கலக்கும் பொருள்தான் நீயோ?

அறியாமை பிரிந்து பகுத்தறிவு நுழைந்தும்,
தன்னை ஏற்றிப் பிறரைத் தூற்றி,
தான்தான் முதலேனும் பேதமை புகுந்த
அஹங்காரத் திமிரின் உணர்வே நீயோ ?

ஐம்புலன் வழியே உள்வரும் அறிவு!
அவ்வறிவால் மலரும் மனதின் ஒலி!
அவ்வொலியால் மிளிரும் உடலின் செயல்!
அச்செயலால் நிகழும் மாற்றம் கொண்டு
ஐம்புலன் வழியே உள்வரும் அறிவு.

இச்சுழலின் நடுவே விழிப்புடன் அமர்ந்து,
உடலின் மனதின் எல்லையை உணர்ந்து,
பன்மைத் தகர்த்து ஒருமைப் புரிந்து,
மிதப்பில் ஒளிரும் விழிப்பே நீயோ!

காதல்!

Saturday, February 14, 2009

அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்!

பொருளை வணங்கும் அதிசய உலகம்,

இதயத் தோலில் முற்கள் விதைக்க,
அகத்தின் கருவில் பலாவின் சுளைபோல்,
ஒளிந்து சிரிக்கும் விந்தை காதல்!

வாழ்வின் நீண்ட நடையின் வழியில்,
பருவம் காலம் மனிதர் பொறுத்து,
நண்பன் தமையன் தந்தை மகனென,
வேடம் பலவை பூண்டது காதல்!

தன்னில் பாதி தவழும் பொழுது,
அலைகள் புரளும் வாழ்வின் மழையில்,
குடையாய்ப் படகாய்க் காக்கும் கருணை,
பெற்றவள் கண்களில் மிதக்கும் காதல்!

கோடை மணலில் நிழலின் துணைபோல்,
தோளின் இருபுறம் கைகள் சுமந்து,
தனிமை விரட்டும் மனதின் எதிரொலி,
நண்பன் தமையன் வழங்கும் காதல்!

நீரைத் தெளித்த நல்வர் கண்களில்,
சோர்வை போக்கும் மலரைத் தெளிக்கும்,
தேரை கொடுக்கும் முல்லைக் கொடியாம்,
தந்தை மகனென வெளிப்படும் காதல்!

மனிதருள் காதல் பலவகை இருப்பின்,
காலம் கழிந்து மனிதர் தழைக்க,
வாழும் பொழுதில் மலரும் கோர்வை,
இளைஞர் காணும் பருவக் காதல்!

பூமிப் பந்தின் காலச் சுழலில்,
மனிதச் சுவடுகள் மறைந்தே போயினும்,
மனிதத் தன்மை சூழலை வென்றிட,
இயற்கை விடுக்கும் வேண்டுதல் காதல்!

சிரிப்பு!

Tuesday, February 10, 2009

என்றும் எதையோ வேண்டும் மனதின்
தன்மை மறந்த தருணமது!
எதிலும் மிருகம் மிஞ்சும் மனிதன்
தன்மை மிளிரும் கருணையது!!
வாழ்வின் நீழம் விரும்பும் வயதில்
சற்றே இறந்திட விரும்புவது,
சிரிப்பின் மழையில் நனையும் பொழுது
உயிரின் உதடுகள் புலம்புவது!!

சோகம் படரா கண்ணீர் தெளித்து
வலியில் இருகும் வயிற்றில் குலுங்கி
வலிமை இழந்து தரையில் புரண்டு
வாழ்வின் விளிம்பில் சிரிக்கும் நொடிகள்,
காலம் கொடுத்த கவலைக் கனவில்
நீரைத் தெளித்து தூக்கம் தகர்த்து
வானை பிடித்து நாளை நோக்கி
வாழ்வை நகர்த்தும் ஏணிப் படிகள்!!

மழை!

கண்முன் பகைவர் கலங்கிடினும்
உள்ளம் ஒருநொடி அழுதிடுமே!
விண்ணின் திரையே அலறியபின்
நெஞ்சம் பலசுகம் உணர்வது ஏன்?

மண்ணின் மணமும் மழையின் துளியும்
தஞ்சம் பிழைக்க வந்தவையோ?!
மண்ணில் புதைந்து நெல்லில் கரைந்து
பஞ்சம் விரட்ட பிறந்தவையோ?!

உழவன் உதிரம் மழையில் நனைந்து
பச்சைக்கம்பளம் விரித்திடுதே!
மலரின் இதழில் ஒதுங்கிய துளியோ
தேனாய் வண்டை அழைத்திடுதே!!

கிழவன் விழிவழி துளிகள் சென்றின்
பேரன் பேத்தியர் நகர்வலமே!
தேனிர் குடித்து வாநீர் துளியில்
காதலர் பார்த்திடும் பெண்ணினமே!!

மறைத்து வைத்த மயிலின் அழகும்
சாரல் தீண்டி வெளிபடுதே!
மண்ணில் மலரும் அழகை எதிர்த்து
வானம் வில்லை விரித்திடுதே!!

ஆறும் அணையும் கரைபுரண்டோடி
கடலை நோக்கி விரைந்திடுதே!
கோடை சோர்ந்த கிணறுகள் கூட
மக்கள் மனம்போல் நிறைந்திடுதே!!

தொடுவதென்ன தென்றலோ ?

Friday, February 06, 2009
பெண்சாரல் காணாப் பட்டுபோனஎன் நிலம் - அவள்
கண்தூறல் தெளித்தானதோர் கற்றுத்தேர்ந்த வனம்!

எப்பொருளிலும் மெய்ப்பொருள் காண்பதென் அறிவு! - ஆயின்
இப்பொருளிலோ மெய் பொருள் காண்பதல்ல அறிவு!!

தோளுயர் மங்கையவள் தொடுவதென்ன தென்றலோ ?
வாழுயர் கூந்தலின் வீச்சிலென்ன நாற்றமோ?

வார்த்தைகளில் தேனிழைக்கும் பேச்சிலென்ன மர்மமோ?
வசப்படுத்தும் வசீகரம் வாஸ்துக்களின் வர்மமோ?

வானுயராயினும் காலுயராயினும் தவித்தரியா என்மனம்,
தோளுயர் பார்வையில் தொலைந்ததோர் இராட்டினம்!

இக்கொந்தளிக்கும் கலவை என் மொத்தக்காதலின் நிலுவை!
இவை இன்றியமையாத சிலவையென அறிந்தமயாது என் சிலுவை!!






Care to love!

Friday, September 05, 2008

Impending break on his clueless neck,

That held aloft, amidst dirt and speck,

That head beneath a hat so swank,

As the eyes misted and tears sank,

Rushed him to crave for her priceless ounce,

Only to repeat this shameless bounce!


As he starves for more, mere things of pride,

To his very heart, has he faithfully lied?

For he knows, so do you, the need,

For nothing but love exists, and to heed,

You neither feign nor wear a veil,

But just stand to bask, come storm or hail!


Love!

Thursday, August 02, 2007

And no longer was she a dove!

Hidden aeons deep within my own cove,

She is all grown, that today I feel a shove,

And a flutter so hard, tearing silences above!

She screams amidst my pain and pretentious glove,

Christening herself my child of love!



The two men in my mirror fade to one!

Strange I feel peace, now with my dove gone!

Every ounce of truth she feasted upon,

Should carry her far and deep till comes my dawn,

When every ray of love will break her yawn

Into our era that will never be bygone!